ரயிலிலிருந்து தவறி விழுந்து பெண் பலி

X
திண்டுக்கல், மொட்டனம்பட்டி ரயில்வே கேட் அருகே மழைநீர் செல்லும் வாய்க்காலில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் திண்டுக்கல் வழியாக செல்லும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கேசவன் தலைமையிலான போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள பெண்ணைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது திண்டுக்கல் ரயில்வே காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.
Next Story

