சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம்
X
கன்னியாகுமரி
சுவாமிதோப்பு காமராஜ் வித்யாலயா மழலையர் மற்றும் நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. “நம் பூமி, நம் பொறுப்பு” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். காமராஜ் கல்வி அறக்கட்டளையின் துணைத் தலைவர் டாக்டர். தர்மரஜினி மற்றும் பள்ளியின் நிர்வாக இயக்குனர் அஜித்ரா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வலசை பறவைகள் கண்காணிப்பு மைய இயக்குனர் டாக்டர். பாலச்சந்திரன், சுற்றுச்சூழல் ஆர்வலர் பேராசிரியர் சுதாமதி, ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினர். நிகழ்ச்சியின் முக்கிய பகுதியான நெகிழி விழிப்புணர்வு பேரணியை பறவைகள் விஞ்ஞானி பாலச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்கின்ற உப்பளம் பகுதியில் நெகிழி அகற்றும் பணி நடைபெற்றது. பின்னர், வனத்துறை அதிகாரிகள் பாலசந்திரிகா, மற்றும் முத்துராமலிங்கம் ஆகியோரின் முன்னிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Next Story