கோரக்கர் சித்தர் கோவிலில் மரக்கன்றுகள் நடும் விழா

X
கன்னியாகுமரி அருகே உள்ள குறண்டி கோரக்கர் சித்தர் கோவில் மிகவும் பழமையான கோவில் ஆகும். தொல்லியல் துறையிலும் அனுமதி பெற்று கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் 99 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் பணியும் நடைபெற்று வருகின்றது. இன்று கோரக்கர் சித்தர் கோவிலில் தமிழக அரசு உத்தரவின் பெயரில் கோவிலைசுற்றிலும் மரம் நடும் விழாவை துவக்கி வைத்து ஒவ்வொரு ராசிக்கும் உடைய மரங்களை நட்டனர். முன்னதாக மரகன்றுகள் நடும் விழாவை இந்து அறநிலைத்துறை அறங்காவல குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மரக்கன்றுகளை மேயர் மகேஷ் நடவு செய்தார் அவருடன் கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, அறங்காவல் குழு உறுப்பினர்கள் திமுக பேரூர் செயலாளர் முத்து தேரூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் ஐயப்பன் ராஜஸ்ரீ கோவில்களின் ஸ்ரீகாரியம் கண்ணன் கோவில் ஊழியர் சுரேஷ் உட்பட கோரக்கர் சித்தர் கோவில் பக்தர்கள் பொதுமக்கள் உடன் கலந்து கொண்டனர்
Next Story

