கூலி தொழிலாளி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்

X
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பூஜ்ஜிரெட்டி பள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி ராஜேந்திரன், தீராத வயிற்று வலியின் காரணமாக கடந்த சில வருடங்களாக அவதியொற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் வயிறு வலி அதிகரித்ததால் வலி தாங்க முடியாமல் இருந்த விவசாய கூலி தொழிலாளி ராஜேந்திரன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் அருகில் இருந்தவர்கள் ராஜேந்திரனை மீட்டு திருத்தணி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார் இந்த நிலையில் திருத்தணி காவல் நிலையத்தில் இருந்து பிரேத பரிசோதனைக்கான கடிதம் கொண்டு வருவதற்காக உறவினர்கள் சென்றிருந்த நிலையில் காவல்துறையில் கடிதம் பெற்றுக்கொண்டு இன்று திருவள்ளூர் அமரர் அறையில் வைக்கப்பட்ட அவரது உடலை பெறுவதற்காக வந்த உறவினர்களுக்கு ராஜேந்திரன் உடலுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடலை கொடுத்ததால் உறவினர்கள் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர் மேலும் விவசாயக் கூலி தொழிலாளி ராஜேந்திரனுக்கு 60 வயது முதிர்ந்த நிலையில் இளம் வயதில் இருக்கும் உடலை எடுத்துச் செல்லும்படி கூறியதால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அமரர் அறை முற்றுகையிட்டு ராஜேந்திரனின் உடலை கொடுக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனை அடுத்து நேற்று யார் யார் உடலை வெளியில் அனுப்பினார்கள் என்பது குறித்து தற்பொழுது அமரர் அறையில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஊழியர்கள் ராஜேந்திரன் உறவினர்கள் முன் ஆய்வு செய்து வருகின்றனர்
Next Story

