திருப்பத்தூரில் விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி சாலை அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி எதிரில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் மாநில குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் தேவராஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு சட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 100 நாள் வேலை திட்டத்திற்கு 4.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அட்டைப் பெற்ற அனைவருக்கும் உடனடியாக வேலை கொடுக்க வேண்டும் போலி அட்டைகளை பயன்படுத்துவதை மாவட்ட நிர்வாகமே தடுக்க வேண்டும் குடிமனை இல்லாத அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்கிட வேண்டும் கலைஞர் கொண்டு வந்த விவசாய தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநில செயலாளர் தினேஷ் சிபிஐ மாவட்ட செயலாளர் சுந்தரேசன் விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் நந்தி மாவட்ட தலைவர் சாமி கண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
Next Story

