உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் சக்கரை ஆலையில் மரக்கன்றுகள் நடப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. ஆலையின் தலைமை நிர்வாகி (முகூபொ) வி. மாலதி அவர்கள் ஆணைக்கிணங்க ஆலையின் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வானது நடந்தது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் சக்கரை ஆலையில் மரக்கன்றுகள் நடப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், எறையூர் கிராமத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. ஆலையின் தலைமை நிர்வாகி (முகூபொ) வி. மாலதி அவர்கள் ஆணைக்கிணங்க ஆலையின் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வானது நடந்தது. மற்றும் ஆலையின் பணியாளர்கள் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பிளாஸ்டிக் மாசுபடுதலை முறியடிப்போம் எனும் தலைப்பின் கீழ் உறுதிமொழி எடுக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நல அலுவலர் இரா.இராஜாமணி, கணக்கு அலுவலர் ஜான் பிரிட்டோ, நிர்வாக அலுவலர் துரை.பாலன் துணை தலைமை பொறியாளர் நாராயணன், துணை தலைமை ரசாயனார் ஆறுமுகம். கரும்பு பெருக்கு அலுவலர் சீதாலட்சுமி ஆகியோர் முன்னிலையில் ஆலையின் தொழிலாளர்கள் பணியாளர்கள் ஆகியோர் பங்கு பெற்றனர்.
Next Story