வட்டாச்சியரிடம் கேள்வி எழுப்பிய இளைஞரால் பரபரப்பு

எஸ்சி எஸ்டி பட்டியலின பழங்குடி மக்களுக்கு புதைப்பதற்கு சுடுகாடு இல்லை விண்வெளியில் ஆவது இடம் கொடுங்கள் என வட்டாட்சியரிடம் ஜமாபந்தியில் கேட்ட இளைஞரால் பரபரப்பு ராக்கெட் வாங்கிக் கொள்வீர்களா என்று திருப்பி கேட்ட வட்டாட்சியர்/
எஸ்சி எஸ்டி பட்டியலின பழங்குடி மக்களுக்கு புதைப்பதற்கு சுடுகாடு இல்லை விண்வெளியில் ஆவது இடம் கொடுங்கள் என வட்டாட்சியரிடம் ஜமாபந்தியில் கேட்ட இளைஞரால் பரபரப்பு ராக்கெட் வாங்கிக் கொள்வீர்களா என்று திருப்பி கேட்ட வட்டாட்சியர்/ திருவள்ளூர் அருகே எஸ்சி எஸ்டி பட்டியலின பழங்குடி மக்களை புதைக்க சுடுகாடு இல்லாத அவலம் : விமான நிலையத்திலாவது அல்லது விண்வெளியில் புதைப்பதற்காகவே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள் என வட்டாட்சியரிடம் இளைஞர் முறையிட்டதால் பரபரப்பு பதிலுக்கு விமான நிலையமோ விண்வெளி நிலையமோ அமைத்துக் கொடுத்தால் புதைப்பதற்கு சடலத்தைக் கொண்டு செல்ல விமானம் அல்லது ராக்கெட் வாங்கிக்கொள்வீர்களா என கேட்டதற்கு தனது சக்திக்கு உழைக்கிற சம்பளத்தில் கிடைக்கிறதை வைத்து வாங்கிக் கொள்வேன் என்று கூறி மனு அளித்த சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியது திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க கோரி மனு அளித்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த இருபதாம் தேதி மே மாதம் தொடங்கி இன்று பதினோராம் நாளாக நடைபெற்று வரும் 14 34 ஆம் பசலி வருவாய் தீர்வு ஆயத்திற்கான ஜமாபந்தியில் மப்பேடு உசேன் நகரம் தொடுகாடு திருப்பந்தியூர் பீமாவரம் திருமணிகுப்பம் உளுந்தை முதுகூர் கொட்டையூர் மும்முடி குப்பம் ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள மக்கள் தங்களது பகுதிக்கு தேவையான சுடுகாடு பாதை வீட்டு மனை பட்டா சுடுகாட்டுக்கான இடங்கள் எஸ்சிஎஸ்டி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மனுக்களை வட்டாட்சியர் ரஜினிகாந்திடம் வழங்கினார் இதில் முமூடிக்குப்பம் கிராமத்தைச் சார்ந்த கோபிநாத் என்ற இளைஞர் எஸ்சி எஸ்டி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வரும் தங்கள் கிராமத்திற்கு இது நாள் வரை சுடுகாடு வசதி இல்லை என்றும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர் முதலமைச்சர் தனிப்பிரிவு குடியரசுத் தலைவர் என பல்வேறு இடங்களிலும் முறையிட்டும் தீர்வு காணப்படாததால் இன்று நடைபெற்ற குறைதீனால் கூட்டத்திற்கு வந்து மீண்டும் மன வழங்கினார் தொடர்ந்து தங்கள் கிராமத்தில் சுடுகாடு இல்லாததால் அலைக்கழிக்கப்பட்டு வருவதால் விமான நிலையமும் அல்லது விண்வெளியில் தங்கள் பகுதி எஸ் எஸ் டி வகுப்பினருக்கு சுடுகாடு அமைத்து தர நடவடிக்கை எடுங்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் இதைக் கேட்ட வட்டாட்சியர் ரஜினிகாந்த் அப்படி விமான நிலையமோ விண்வெளியோ அமைத்துக் கொடுத்தால் விமானமும் ராக்கெட்டையும் வாங்கிக் கொள்வீர்களா என்று கேட்டது ஜமாபந்தி பரபரப்பு ஏற்படுத்தியது அதற்கு மனு கொடுத்த இளைஞர் கோபிநாத் எப்படியோ உழைக்கிற சம்பளத்தில் வாங்கிக் கொள்ள முயற்சிக்கிறேன் முதலில் இடத்தை கொடுங்கள் என்று கேட்டார் பின்னர் இதுகுறித்து எஸ்சிஎஸ்டி ஆணையம் வரை மனு சென்றுள்ளதால் ஒரு வார காலத்திற்குள் மாற்று இடத்தில் சுடுகாடு அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் வழி பிரச்சனை இருந்தாலும் அதை தீர்ப்பதற்கு வருவாய்த்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்தார் இதனைத் தொடர்ந்து மனு அளித்த கோபிநாத் சமரசம் அடைந்து கோரிக்கை மனுவை வழங்கிவிட்டு சென்றார் பேட்டி திரு கோபிநாத் மும்முடி குப்பம்
Next Story