மீன்கள் இறந்து மிதந்த கிணற்றில் துர்நாற்றம் தண்ணீரை வெளியேற்றிய பரமத்தி பேரூராட்சி நிர்வாகம்.

X
Paramathi Velur King 24x7 |5 Jun 2025 6:52 PM ISTமீன்கள் இறந்து மிதந்த கிணற்றில் துர்நாற்றம் தண்ணீரை வெளியேற்றிய பரமத்தி பேரூராட்சி நிர்வாகதிற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பரமத்திவேலூர், ஜூன்.5: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட கனிராவுத்தர் தெருவில் ஊர் பொதுக்கிணறு உள்ளது. கடந்த 4 நாட்களாக தொடர்ந்து இந்த கிணற்றில் மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதந்தன. இதனால் கிணற்று தண்ணீரில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் மீன்களை அப்புறப்படுத்தினர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த பரமத்தி பேரூராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் கிணற்றிலிருந்து நீர் மாதிரி எடுத்து அதில் ஏதேனும் விஷத்தன்மை உள்ளதா என்பது குறித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக நீரில் விஷத் தன்மை ஏதும் கலந்திருப்பின் அதனை முழுமையாக அப்புறப்படுத்த மின் மோட்டார் மூலம் கிணற்றில் ஊரும் தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கிணற்றில் இருந்து தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது. பேரூராட்சி நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர். மேலும் கிணற்றின் அடியில் தேங்கியுள்ள கழிவுகளை முழுமையாக தூர்வாரி சுத்தப்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
