கிள்ளுக்கோட்டை கிராமத்தில் விதைப்பந்து விதைக்கும் விழா

விதைப்பந்து
தஞ்சாவூர் ஆர்.வி.எஸ் வேளாண்மைக் கல்லூரி மாணவர்களின் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே கிள்ளுக்கோட்டை கிராமத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விதைப்பந்து விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புவி வெப்பமயமாதலால் பல்வேறு இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு, உலகம் முழுவதும் பேராபத்தில் சிக்கித் தவிக்கிறது. எனவே, விதைகளை விதைத்து மண்ணைக் காப்பது என்ற நோக்கில், தஞ்சாவூர் ஆர்.வி.எஸ் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிள்ளுக்கோட்டை கிராமத்தில், புதிய வனம் உருவாக்கும் வகையில் விதைபந்து விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி இயக்குநர் பி.பாண்டியராஜன், கல்லூரி முதல்வர் எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மேலும், கழக ஆலோசகர் முனைவர் ஜி. கருப்புசாமி, பி. ஹரிணி மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் ஒருங்கினைப்பாளர், முனைவர் கே.கரிமனிஷா, முனைவர் பி.லிபிராபின் ஆகியோர் கலந்து கொண்டனர். அழிவின் விளம்பில் இருக்கும் பூமியை பாகுகாக்கும் நோக்கத்தில் விதைப்பந்துக்கள் விதைக்கப்பட்டன. மேலும், புங்கம், சவுக்கு, பூவரசன், கொன்றை போன்ற 1,200 விதைகள் விதைபந்துக்கள் மூலம் விதைக்கப்பட்டன.
Next Story