லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், இடைத்தரகராக செயல்பட்ட ஊர்காவல் படையை சேர்ந்த பெண் கைது

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், இடைத்தரகராக செயல்பட்ட ஊர்காவல் படையை சேர்ந்த பெண் கைது
X
கைது
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தாலுகா பகுதியை சேர்ந்த அம்மங்குடி கிராமத்தை குமரேசன். இவரது நிலம் தோப்புவிடுதி கிராமத்தில் உள்ளது. கூட்டுப் பட்டாவில் உள்ள நிலத்திற்கு உட்பிரிவு செய்து, தனிப்பட்டா பெற, தோப்புவிடுதி கிராம நிர்வாக அலுவலரான புதுக்கோட்டை மாவட்டம், மட்டங்கால் பகுதியை சேர்ந்த முருகேசன் (32), என்பவரை அணுகியுள்ளார்.  அப்போது, முருகேசன் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், பணத்தை திருவோணம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள இ-சேவை மையம் நடத்தி வரும் ஊர்காவல் படையில் பணியாற்றும் சுதா என்பவரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகேசன், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு காவல்பிரிவில் புகார் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின் படி, ரசாயனம் தடவிய பணத்தை பெற்றுக் கொண்டு  குமரேசன், சுதா நடத்தி வரும் இ-சேவை மையத்திற்கு வந்து, புதன்கிழமை பணத்தை சுதாவிடம் கொடுத்தார். பிறகு, லஞ்சப் பணத்தை கிராம நிர்வாக அலுவலர் முருகேசனிடம் சுதா வழங்கியுள்ளார். அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், சுதா இருவரையும் கையும் களவுமாய் பிடித்தனர். பிறகு இருவரையும் திருவோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அன்பரசன், ஆய்வாளர் பத்மாவதி தலைமையில் சுமார் மூன்று நேரம் விசாரணை நடத்தி பின்னர் இருவரையும் கைது செய்தனர்.
Next Story