செங்குணம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டம் 2025-2026 ஆம் ஆண்டு பயனாளிகளை தேர்வு செய்வதற்காக செங்குணம் கிராம ஊராட்சியின் சிறப்பு கிராம சபை கூட்டம் 05-06-2025 இன்று செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது.
பெரம்பலூர் அருகே செங்குணம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம். பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டம் 2025-2026 ஆம் ஆண்டு பயனாளிகளை தேர்வு செய்வதற்காக செங்குணம் கிராம ஊராட்சியின் சிறப்பு கிராம சபை கூட்டம் 05-06-2025 இன்று செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் இமயவரம்பன் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மருதுபாண்டி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் செங்குணம் ஊராட்சி மன்ற செயலர் கோவிந்தன் பொதுமக்களிடையே 2000 - 2001 ஆம் ஆண்டிற்கு முன்பு கட்டப்பட்டு தற்போது ழுதடைந்து நிலையில் காணப்படும் தொகுப்பு வீடுகளை இடித்து புதிதாக அரசு வழிகாட்டுதல்களகக்ளின் புதிய வீடு கட்டிக்கொள்ளலாம் எனவும் தகுதி உடையவர்கள் உரிய ஆவணங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உடனே மனு கொடுக்க வேண்டும் எனவும் தகவல் தெரிவித்ததார் இக்கூட்டத்தில் செங்குணம் குமார் அய்யாவு, மகளிர் சுய உதவி குழு கணக்காளர் கெஹலெட்சுமி உட்பட பொதுமக்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்
Next Story




