கடையநல்லூர் அருகே கொட்டும் மழையில் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

X
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திரிகூடபுரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகியும் முறையான குடிநீர் வழங்கவில்லை. பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நேற்று பொதுமக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காலிக்குடங்களுடன் திரண்டு வந்து திருமங்கலம்- -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சொக்கம்பட்டி போலீசார் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Next Story

