வேப்பனப்பள்ளி அருகே வனப்பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள்.

வேப்பனப்பள்ளி அருகே வனப்பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள்.
X
வேப்பனப்பள்ளி அருகே வனப்பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நேரலகிரி. கொங்கனப்பள்ளி, சிகரமாகனப்பள்ளி ஆகிய வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வந்தன. இருமாநில வனப்பகுதிகளுக்கு விரட்டினர். இந்த நிலையில் மீண்டும் 3 காட்டு யானைகளும் கொட்டாயூர் வனப்பகுதியில் தொடர்ந்து யானைகள் முகாமிட்டுள்ளதால் அதையொட்டிய கொல்லப்பள்ளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமமக்கள், விவசாயிகளுக்கும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டாம் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story