சங்கரன்கோவிலில் வீடு புகுந்து நகை திருடிய பெண் கைது

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியை சேர்ந்தவர் முருகன் மனைவி மணிமாலா. இவரது வீட்டில் பீரோவில் இருந்த 8 பவுன் தங்கநகை காணாமல் போனது குறித்து சின்னகோவிலான்குளம் போலீஸ் மணிமாலாயிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் உறவினர் பெண்ணான சுப்புலட்சுமி நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து சின்னகோவிலாகுளம் போலீசார் சுப்புலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story

