டூவீலர் கவிழ்ந்த விபத்தில்டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் சூளகிரி அருகே உள்ள புக்கசாகரம் அருகேயுள்ள திப்பப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் லட்சுமிபதி (32) இவர் பேரண்டப்பள்ளியில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் லட்சுமிபதி செம்பட்டி-திப்பேப்பள்ளி சாலையில் டூவீலரில் சென்றார் அப்போது எதிர்பாரவிதமாக சாலையில் டூவீலர் கவிழ்ந்தது. விழுந்ததில் லட்சுமிபதி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே லட்சுமிபதி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

