பெண் குழந்தைகளுக்கு கல்வி

X
கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் உயர்கல்வி தொடர்பாக பெண் குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், 'நிறைந்தது மனம்' நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.அவர் பேசுகையில், 'பள்ளி இடைநின்ற மற்றும் துணைத்தேர்வு எழுதவுள்ள மாணவியருக்கு தன்னம்பிக்கை மற்றும் கல்வி ஆர்வத்தை வளர்க்க வேண்டும். பள்ளி மாணவியர் தவறாமல் உயர்கல்வி கற்க வேண்டும். எதிர்காலத்தில் உயர்கல்வி மிகவும் அவசியம்' என்றார். தொடர்ந்து 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சி.இ.ஓ., கார்த்திகா, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, பள்ளி தலைமையாசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story

