குடிபோதையில் காரை ஓட்டியவருக்கு அபராதம்

குடிபோதையில்  காரை ஓட்டியவருக்கு அபராதம்
X
நாகர்கோவில்
குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதான நடவடிக்கையை தீவிர படுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் மாவட்டம் முழுவதும் வாகன ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன்படி நாகர்கோவில் மாநகரில் நேற்று பார்வதிபுரம் பகுதியில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது டிரைவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து டிரைவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல ஒழுகினசேரி பகுதியில் ஒரு டெம்போவை போலீசார் மறித்து சோதனை செய்தார். சோதனையில் டிரைவரின் லைசென்ஸ் காலாவதியானது தெரிய வந்தது. இதையடுத்து டிரைவருக்கு 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story