மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு மானியம்

மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு  மானியம்
X
மீன் வள விவசாயிகள், மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு உள்ளீட்டு மானியம் வழங்கப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தகவல்
திண்டுக்கல் மாவட்டம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் மீன் வளர்ப்புத் தொழில் செய்து வரும் விவசாயிகள் தங்கள் மீன் பண்ணைகளை பதிவு செய்து பல்வேறு அரசு மானியத் திட்டங்களைப் பெற்று பயனடைந்து, மீன் உற்பத்தி பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை மீன்வள விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக ரூ.5,000 மானியமாக வழங்கப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மீன் வள விவசாயிகள், இத்திட்டத்தின் கீழ் மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியத்தைப் பெற்று பயன்பெறலாம். இத்திட்டம் குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் பெற, “மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், 80 அடி ரோடு, நேருஜி நகர், திண்டுக்கல் – 624 001” என்ற முகவரியில் செயல்படும் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வேலை நாட்களில் சம்பந்தப்பட்ட அலுவலர்களை நேரிலோ அல்லது 9751664565, 7598236815 மற்றும் 9384824386 ஆகிய அலைபேசி எண்கள் வாயிலாக தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Next Story