ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

ஊராட்சி ஒன்றிய பள்ளியில்  பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
X
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.தொடா்ந்து சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் டி. ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். பள்ளி மாணவி வி.நித்யஸ்ரீ பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா். இந்தப் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும், அவா்களின் பெற்றோருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், பள்ளி ஆசிரியை ச.சாந்தி, பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவா் ஏ.மல்லிகா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Next Story