மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தார் போடும் பணி நிறுத்தம்

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தார் போடும் பணி  நிறுத்தம்
X
ஜல்லி கிடைக்கவில்லை என அைவய்
களியக்காவிளை முதல் நாகர்கோவில் வரை தேசிய நெடுஞ்சாலையில் பழுதடைந்த பகுதி தார் போடும் பணி ரூபாய் 14 கோடி 85 லட்சம் செலவில் நடந்து வருகிறது இதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது பெரும்பான்மையான பகுதி தார் போடப்பட்டு பணிகள் முடிந்த நிலையில் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பணிகள் நடந்து வருகிறது . இதனால் மேம்பாலத்தில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டு கீழ் பகுதி வழியாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கிறது. மார்த்தாண்டம் மேம்பாலம் பகுதியில் தார் அலை அலையாக காணப்படுகிறது இதனால் சுமார் ஒரு இன்ச் கனத்திற்கு மேல் பகுதி தார் புதிய தொழில்நுட்பத்தில் உள்ள மிஷின் மூலம் இழக்கி எடுக்கும் பணி நிறைவடைந்தது தார் போடும் பணி துவக்கப்பட்டது பணி நிறைவடைந்து நேற்று முதல் போக்குவரத்து துவங்கும் என நெடுஞ்சாலை அதிகாரிகள் உறுதிப்பட தெரிவித்தனர். மேம்பாலத்தில் தார் போடுவதற்கு கால் இன்ச், அரை இன்ச், முக்கால் இன்ச், மற்றும் அதற்கு கீழ் உள்ள இஞ்ச் ஜல்லி தேவைப்படுகிறது போதுமான ஜல்லி கிடைக்காமல் தார் போடும் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தற்பொழுது கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஜல்லி கிடைத்தது பணி இன்று துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது திங்கள்கிழமை முதல் மேம்பாலத்தில் போக்குவரத்து துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story