மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை இறுதி ஆண்டு மாணவர்களின் தாரா ரோபோட் உருவாக்கம்

X
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை இறுதி ஆண்டு மாணவர்களால் தாரா ரோபோட் 25 உருவாக்கப்பட்டுள்ளது.இதன் தொடக்க விழா இன்று காலை மின்னியல் ஆய்வு கூடத்தில் நடைபெற்றது.இந்த ரோபோ முழுக்க முழுக்க மின்னியல் மற்றும் மின்னணுவியல் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் இவர்களோடு இணைந்து லாம்ஸ் ஆட்டோமேஷன் நிறுவன தொழில் நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டது. இந்த தாரா ரோபோ உருவாவதற்கு முழு ஒத்துழைப்பும் ஆய்வகப் பயன்பாட்டையும் கொடுத்து கல்லூரியின் தாளாளர் முனைவர் சக்தி கோ.ப. செந்தில் குமார் துவக்கி வைத்தார். இந்த தாரா ரோபோ 25 உருவாவதற்கு வழிகாட்டியாக கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ ராஜா, கல்லூரியின் டீன் முனைவர் வா.ராமசாமி, கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ஆ. கிருஷ்ணமூர்த்தி, நிர்வாக அலுவலர் மு சதானந்தன், இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர் முனைவர் சக்தி அ. அல்போன்ஸ்,பேராசிரியர்மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை நன்யங் டெக்னாலஜிஸ் பல்கலைக்கழகம் சிங்கப்பூர் முனைவர் சக்தி.ரமணி கண்ணன், இணை பேராசிரியர் மின்னியல் & மின்னணுவியல் துறை மலேசியா மற்றும் முனைவர் சக்தி. லெனின் கோபால் இணை பேராசிரியர், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சௌதம்தான் பல்கலைக்கழகம் மலேசியா மற்றும் மின்னியல் துறை தலைவர் ப.ராஜீவ் காந்தி அவர்கள் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியை ப.தமிழரசி அவர்கள் ஆகியோர் சிறப்பாக தாரா ரோபோ 25 உருவாகுவதற்கு பெருந்துணை புரிந்து வாழ்த்தினார்.இதன் செயல்பாடுகளான தூய்மை செய்தல் மற்றும் உளறச் செய்தல் கைகுலுக்குதல் வரவேற்பு அளிப்பது தடைகளை தாண்டி முன்னேறுவது மற்றும் சேட் ஜிபிடி உடன் இணைந்து இணைய வழியில் பல்வேறு கேள்விகளை கேட்டு அதற்கான தனித்துவமான பதில்களை பெறலாம்.
Next Story

