கூட்டணியில் சேர அழைப்பு விடுத்த செல்வ பெருந்தகைக்கு நன்றி -விஜய பிரபாகரன் பேட்டி.

கூட்டணியில் சேர அழைப்பு விடுத்த செல்வ பெருந்தகைக்கு நன்றி -விஜய பிரபாகரன் பேட்டி.
கூட்டணியில் சேர அழைப்பு விடுத்த செல்வ பெருந்தகைக்கு நன்றி -விஜய பிரபாகரன் பேட்டி. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில் தேமுதிக ஒன்றிய செயலாளர் சின்னசாமி இல்ல திருமண விழாவில் தேமுதிக இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,தேமுதிக வளர்ச்சியை நோக்கி செல்வது சந்தோசமாக உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி. ஆனால், தற்போது வளர்ச்சியை நோக்கி தான் தேமுதிகவின் நிலைப்பாடு உள்ளது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். ஜனவரி 9 கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணியை பற்றி அறிவிப்பார் என தெரிவித்தார்.
Next Story