திருப்பத்தூரில் ஆட்டு இறைச்சி வளாகம் சீரமைக்க கோரிக்கை

திருப்பத்தூரில் ஆட்டு இறைச்சி வளாகம் சீரமைக்க கோரிக்கை
X
திருப்பத்தூரில் ஆட்டு இறைச்சி வளாகம் சீரமைக்க கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து உயிர் சேதத்தை ஏற்படுத்தும் ஆட்டு இறைச்சி கடைகளை புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட ராஜன் தெரு பகுதியில் ஆட்டு இறைச்சி வளாகம் சுமார் 50 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது இந்த ஆட்டு இறைச்சி கடை மிகவும் சிதலமடைந்து எந்த நேரத்திலும் விழுந்து உயிர் சேதத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது இந்த மார்கட் கடைக்கு தினம் தோறும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த ஆட்டு இறைச்சி வளாக கடைக்கு வந்து செல்கின்றனர் இதைக் குறித்து நகராட்சி இடம் பலமுறை அப்பகுதி மக்கள் வியாபாரிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர் இதை துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உயிர் சேதம் ஏற்படுவதற்குள் சரி செய்ய கோரிக்கை முன்வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story