போச்சம்பள்ளி அருகே முன்னாள் ராணுவ வீரரை தாக்கியவர் கைது.

போச்சம்பள்ளி அருகே முன்னாள் ராணுவ வீரரை தாக்கியவர் கைது.
X
போச்சம்பள்ளி அருகே முன்னாள் ராணுவ வீரரை தாக்கியவர் கைது.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேயுள்ள கெலவள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (40) முன்னாள் ராணுவ வீரர். இவர் சம்வம் அன்று மஞ்சமேடு மாதேஸ்வரன் கோவில் பகுதிக்கு உறவினரின் இறப்பு நிகழ்வுக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு அவர் காரை கோவில் வளாகத்தில் நிறுத்தி இருந்தார். அங்கு வந்த ராஜா (45) சின்னசாமி (65) கோவிந்தசாமி (38) உள்ளிட்டோர் காரை நிறுத்தியதற்காக கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் ராஜசேகரை, ராஜா தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.
Next Story