அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஜெயங்கொண்டம் ஒன்றிய பேரவை கூட்டம்

X
அரியலூர் ஜூன். 6- அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஜெயங்கொண்டம் ஒன்றிய பேரவை கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. காத்தவராயன் தலைமை வகித்தார். பேரவை கூட்டத்தில் மாநில பொருளாளர் காரல் மார்க்ஸ் கலந்து கொண்டு அரசியல் விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ராமநாதன் அனைவரையும் வரவேற்று இளைஞர்களின் எதிர்கால கடமைகளை விளக்கி பேசினார். ஏ ஐ ஒய்ஃப் ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவராக காத்தவராயன், செயலாளராக ராமன், பொருளாளராக ஆனந்தகுமார், துணைத்தலைவராக லோகராஜா, துணை செயலாளர் வேல்முருகன், பாண்டியன் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர் நிர்வாகிகளை லோகநாதன்,ஜாகிர் உசேன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தீர்மானங்கள் அரசு கலைக் கல்லூரியை சின்ன வளையத்தில் கட்டப்பட்டு வரும்புதிய கட்டிட பணியை விரைந்து முடித்து உடனடியாக இயங்குவதற்கு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து பயணிகள் தங்கும் இடத்தில் குடிகாரர்களும் சமூகவிரோதிகளும் நிரந்தரமாக அமர்ந்திருக்கும் போக்கு தொடர்கிறது. பேருந்து பயணிகள் நலம் கருதி குடிகாரர்களையும் சமூக விரோத சக்திகளையும் நிரந்தரமாக அகற்றி பேருந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். உடையார்பாளையம் புதிய பேருந்து நிலையம் அருகில் காந்திநகர் மூணு சென்ட் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. புதிய பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை வேண்டும். தனியார் பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட பட்டியல் இன மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இறுதியில் சேரஅரசு நன்றி கூறினார் .
Next Story

