கிருஷ்ணகிரி: உருது நடுநிலைப்பள்ளி க புதிய கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ.

X
கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 25-வது வார்டில் தவுலதாபாத் நகராட்சி உருது நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பள்ளி மேம்பாட்டு மானிய மூலதன பணி 2023-2024-ன் கீழ் 32 லட்சம் ரூபாய் மதிபீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைப்பெற்றது. இந்த விழாவிற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் பர்கூர் எம்.எல்.ஏவுமான டி.மதியழகன் தலைமையில் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் 7 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சமையல் அறை கட்டிடம் கட்ட பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து பேசினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

