போதை பொருள்கள் ஒழிப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு
பெரம்பலூர் வட்டம் செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சூன்-6 இன்று தலைமை ஆசிரியர் மதியழகன் தலைமையில் போதை பொருள்கள் ஒழிப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. பெரம்பலூர் பெஸ்ட் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் புவனேஸ்வரி தேவராஜன் , பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறையின் சகி ஒருங்கிணைந்த சேவை மைய வழக்கு பணியாளர் மேகலா ஆகியோர் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். போதை பொருள்களுக்கு அடிமையாகாமல் நன்கு படிப்பதன் மூலம் மாணவர்கள் சமூகத்தில் சிறந்த நபராக விளங்கிய முடியும் அறிவுரை வழங்கினார்.பெரம்பலூர் ஆல் தி சில்ரன் அறக்கட்டளையின் மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராமு, பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளையின் குருதி ஏற்பாட்டாளர் உதிரம் நாகராஜ், குருதி கொடையாளர் செங்குணம் குமார் அய்யாவு கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னதாக ஆசிரியர் செல்வி வரவேற்றார்.முடிவில் ஆசிரியர் ராமலிங்கம் நன்றி கூறினார். மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்
Next Story



