சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட குடைகள்

X
Komarapalayam King 24x7 |6 Jun 2025 7:23 PM ISTகுமாரபாளையம் பகுதிகளில் எண்ணங்களின் சங்கமம் பொதுநல அமைப்பின் சார்பில், சாலையோர வியாபாரிகளுக்கு பெரிய குடைகள் வழங்கப்பட்டன
குமாரபாளையம் பகுதிகளில் எண்ணங்களின் சங்கமம் பொதுநல அமைப்பின் சார்பில், குமாரபாளையத்தில் சாலை ஓரத்தில் வெயிலில் சிரமப்படும் 10 சிறு வியாபாரிகளுக்கு பெரிய குடைகளை இன்ஸ்பெக்டர் தவமணி வழங்கினார். அமைப்பின் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். விடியல் பிரகாஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். சாலையோரம் பழங்கள் விற்பவர்கள், டூவீலர் பஞ்சர் ஓட்டுபவர்கள், செருப்பு தைப்பவர்கள், பூட்டு ரிப்பேர் செய்பவர்கள், பூக்கள் கட்டி வியாபாரம் செய்பவர்கள் உள்பட பலருக்கு குடைகள் வழங்கப்பட்டன.
Next Story
