திருவாய்மூர் நீல விடங்க தியாகராஜ சுவாமி, பாலினும் நன்மொழியாள் சமேத வாய்மூர்நாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த திருவாய்மூரில் நீல விடங்க தியாகராஜ சுவாமி, பாலினும் நன்மொழியாள் சமேத வாய்மூர்நாத சுவாமி கோயில் மற்றும் அஷ்ட மகா பைரவர்கள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு,தங்கப்பா குருக்கள் தலைமையில் ஸ்தலகுரு பிச்சைமணி சிவாச்சாரியார்களால் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மணக்கோலத்தில் சந்திரசேகர் சுவாமி அல்லியங்கோதை அம்பாள் மாலை மாற்றும் வைபோகம் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து திருக்கல்யாணம் உற்சகத்தை தரிசனம் செய்தனர். பின்னர், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சுவாமி அம்பாள் வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் வடை பாயசத்துடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story

