திருவட்டாறு ஸ்ரீ ஜடாதீஷ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

திருவட்டாறு ஸ்ரீ ஜடாதீஷ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
X
நாளை நடக்கிறது
பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக்கூறப்படும் குமரி மாவட்டம்    திருவட்டாறு தளியல் ஸ்ரீ ஜடாதீஸ்வரர் ஆலயம் மிகவும் பழமை வாய்ந்தது.  திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஐப்பசி, பங்குனி மாத திருவிழாவின் ஒன்பதாவது நாளின் சுவாமி ஆறாட்டுக்கு எழுந்தருளும் இக்கோவிலில்  கும்பாபிஷேக விழா  நேற்று    கணபதி ஹோமத்துடன் துவங்கியது.   நேற்று அஷ்டாபிஷேகம் உச்சகால பூஜை, அன்னதானம், அலங்கார தீபாராதனை வாஸ்து பலி ஆகியன நடந்தது.    நாளை (ஜூன். 7)  காலை 4.30 மனிக்கு கணபதி ஹோமம்,காலை 6 மணிக்கு உஷ பூஜை, காலை 6.30 மணிக்கு அபிஷேகம்,  காலை 6.45 மணிக்கு 12 ஜோதிர்லிங்க புனித நீரை நிரப்பிய பிரம்ம கலசம்  சிவலிங்கத்திற்கு அபிஷேகம்,  காலை 7.15 மணிக்கு கைலாய வாத்தியம் முழங்க, பஞ்சாரி மேளம் ஒலிக்க 12 ஜோதிர்லிங்க கலசங்கள்  எழுந்தருளி கோவிலை வலம் வருதல்,  காலை 7.30 மணியில் இருந்து 8.30க்குள் 12 ஜோதிர் லிங்க புனித நீரும் தனித்தனியாக கும்ப கலசத்தின் மீது  மகா கும்பாபிஷேகம் நடத்துதல் ஆகியன நடைபெறுகிறது.    கும்பாபிஷேக ஏற்பாடுகளை பக்தர்கள் செய்துள்ளனர்.
Next Story