கோத்தகிரி நகராட்சிமுதல் கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுப்பால் பரபரப்பு

பத்திரிக்கையாளர்களைத் தவிர்த்து முடிவுகள் எடுக்கப்படுவது மக்களின் தகவல் அறியும் உரிமையை பறிக்கும் செயல் எனவும் கூறப்படுகிறது.
கோத்தகிரி நகராட்சிமுதல் கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுப்பால் பரபரப்பு நீலகிரி மாவட்ட கோத்தகிரியில் சிறப்பு நிலை பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. அண்மையில் தமிழக அரசு பல்வேறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டது அதில் கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்தது நகராட்சியாக அறிவிக்கப்பட்டது . அதனைத் தொடர்ந்து நகராட்சி முதல் ஆணையராக மோகன்குமார் என்பவரை நியமிக்கப்பட்டு இன்று நகராட்சியின் முதல் கூட்டம் 21 நகர் மன்ற உறுப்பினர்களுடன் கூட்டம் தொடங்கியது பல்வேறு முறைகேடுகள் குறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் இடையே பெரும் வாக்குவாதங்கள் நடைபெற்றது அப்பொழுது செய்தி சேகரிக்கு சென்ற பத்திரிகையாளர்களை அனுமதிக்காமல் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக எல்லா முக்கியக் கூட்டங்களிலும் ஊடகவியலாளர்கள் பங்கேற்று செய்திகளை பதிவுசெய்வது வழக்கம். ஆனால், இம்முறை நகராட்சி நிர்வாகம், கஊடகங்களின் நுழைவை தடுக்க நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கூட்டத்திற்கு வெளியே காத்திருந்த பல ஊடகவியலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “பொதுநல கூட்டங்களில் ஊடகங்களை தவிர்ப்பது ஜனநாயக விரோத செயல்,” என்று அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பத்திரிக்கையாளர்களைத் தவிர்த்து முடிவுகள் எடுக்கப்படுவது மக்களின் தகவல் அறியும் உரிமையை பறிக்கும் செயல் எனவும் கூறப்படுகிறது.
Next Story