வழக்கிலிருந்து விடுவிக்க பணம் வாங்கிய தேமுதிக பிரமுகர்

X
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கேரளா பகுதியான தெற்கே கொல்லங்கோடு பகுதி சேர்ந்தவர் ரீனா (44). இவரது தம்பி ரோபின் (35) என்பவரை கடந்த 22ஆம் தேதி ஒரு வழக்கு சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்த ரீனா உடனடியாக கொல்லங்கோடு போலீஸ் நிலையம் வந்து விசாரித்தார். அப்போது ரோபினை வழக்கில் இருந்து விடுவிக்க கவுன்சிலர் ஒருவர் தேமுதிக பிரமுகர் ஒருவரை அடையாளம் காட்டினார். தேமுதிக பிரமுகர் ஒரு லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளார். ஆனால் 22ஆம் தேதி இரவு கொல்லங்கோடு போலீசார் ரோபினை குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அடுத்த நாள் ஜாமீனில் விடுவித்தனர். இந்த நிலையில் வழக்கை நீதிமன்றத்தில் இருந்து ரத்து செய்து விடுவதாக கூறி தேமுதிக பிரமுகர் மீண்டும் 25 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி ரீனா கொல்லங்கோடு காவல் நிலையம் வந்தபோது அங்கு வந்த தேமுதிக பிரமுகரிடம் பணத்தை திருப்பி கேட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இது குறித்து ரீனா கொல்லங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகியிடம் புகார் அளித்தார். போலீசார் இரண்டு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

