நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் தேயிலை மகசூல் அதிகரிப்பு ....

தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். .
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் தேயிலை மகசூல் அதிகரிப்பு ............தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ..................... நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் தேயிலை விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் சிறு மற்றும் குறு விவசாயிகள் என்பதால், சிறிய அளவிலான தோட்டங்களே வைத்துள்ளனர். இவர்கள் நாள் தோறும் தங்களது தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை பறித்து அரசு மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகின்றனர். பொதுவாக நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவங்கி 2 மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதேபோல், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் தேயிலை மகசூல் அதிகரிக்கும். இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை பனி பொழிவு மற்றும் வெயிலின் காரணமாக தேயிலை மகசூல் குறையும். இச்சமயங்களில் தேயிலை மகசூல் குறையும். ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 25ஆம் தேதி முதல் தொடர் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது கனமழையின் காரணமாக தேயிலை தோட்டங்கள் பசுமையாக காட்சியளித்தது இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story