குமரி : ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நோட்டீஸ்

குமரி : ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நோட்டீஸ்
X
திங்கள் நகர்
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர், இரணியல், கல்லுக்கூட்டம் பேரூராட்சி மற்றும் ஆத்தி விளை  ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் நெருக்கடியும் வணிக நிறுவனங்களும் பெருகி வருகின்றன. இதனால் சில நேரங்களில் வாகனங்கள் கடும் நெருக்கடிக்குள் சிக்கித் திணறும் சம்பவம்  நடந்து வருகிறது. வணிக நிறுவனங்கள் சாலைகளை ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.      இதனால் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பேரூராட்சி நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்து வந்தனர். இந்த மனுக்களை விசாத்த நெடுஞ்சாலை துறையினர் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முடிவு செய்து, 7 நாட்களுக்குள் பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என திங்கள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். ஏழு நாட்களுக்குள் ஆக்கிரம்புகளை அகற்றாவிட்டால் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
Next Story