உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவித்தொகை

X
தஞ்சாவூர் மாவட்டத்தில், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உழவர் பாதுகாப்புத்திட்ட அட்டை (மெரூன் நிறம்) வைத்துள்ள நபர் இயற்கையாக மரணம் அடைந்தால், அவரின் குடும்பத்தினருக்கு இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.20,000/- மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ரூபாய் 2500/- சேர்து 22,500/- வழங்கப்படும். இதில் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ரூ.2,500/- தொடர்புடைய பஞ்சாயத்து மூலம் அளிக்கப்பட்டிருப்பின் சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் மூலம் உறுப்பினராக உள்ள நபரின் இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.20,000/- மட்டுமே வழங்கப்படும் எனவே, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து நிவாரண உதவித்தொகை, தற்காலிக இயலாமைக்கான ஓய்வூதியம் மற்றும் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த நபரின் குழந்தைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதனை பெறுவதற்கு நிகழ்வு நடைபெற்ற நாளிலிருந்து 6 மாததிற்குள் உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய கிராம நிருவாக அலுவலர் மற்றும் தனிவட்டாட்சியர் (ச.பா.தி) அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் தவிர்க்க இயலாத மற்றும் அறியாமையின் காரணங்களினால் காலதாமதமாக விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களுக்கும் உரிய அலுவலரிடம் அனுமதி பெற்ற பிறகு பயன்பெற இயலும் (காலதாமத காலம் அதிகபட்சம் 1 ½ வருடம் வரை) எனவே மேற்கண்டவாறு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளைப் பொதுமக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Next Story

