உலகப் புகழ்பெற்ற உதகை மலர்க்கண்காட்சி மலர் அலங்காரங்கள் அகற்றும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்

தொடர் மலையின் காரணமாக பூக்கள் அழுகிய நிலையில் உள்ளதால் அகற்றும்
உலகப் புகழ்பெற்ற உதகை மலர்க்கண்காட்சி மலர் அலங்காரங்கள் அகற்றும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம் உலகமெங்கும் புகழ்பெற்ற உதகை மலர்க்கண்காட்சி, ஆண்டுதோறும் நடைபெறும் மலர்களின் சங்கம நிகழ்வாக, இந்த ஆண்டும் பல சிறப்பான மலர்ச் சிற்பங்களுடன் மிகச் சிறப்பாக தொடங்கி நடைபெற்றது இந்த ஆண்டுக்கான கண்காட்சியில், இந்தியா முழுவதிலும் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்கள் கண்காட்சி மண்டபங்களை அலங்கரிக்கின்றன. குறிப்பாக, ரோஜா, டாலியா, லில்லி, ஆர்கிட், கார்னேஷன் மற்றும் பசுமை செடிகள், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன இந்த கண்காட்சிக்காக 100க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள், மலர் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் தீவிரமாக பணியாற்றினர் அவர்களது உழைப்பின் வெளிப்பாடே இந்த விழா. “மலர்களின் மூலம் இயற்கையின் நம்பிக்கையை மக்களுக்கு எடுத்துச்செல்லும் இந்த நிகழ்ச்சி, ஊட்டியின் பெருமையை உலகுக்கு காட்டும் அரங்கமாக உள்ளது” என உதகை தோட்டக்கலைத் துறையினர் மகிழ்ச்சி தெரிவித்தனர் ஊட்டி தாவரவியல் பூங்காவில் கடந்த 15ம் தேதி மலர் கண்காட்சி துவங்கியது. கண்காட்சியில், இரண்டு லட்சம் மலர்களால் ஆன பழங்கால அரசர் அரண்மனை அமைக்கப்பட்டு இருந்தது. அதேபோல் அரியணை, கோட்டை நுழைவு வாயில், படகு உள்ளிட்ட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது இந்த மலர் அலங்காரங்கள் கொய்மலர்கள் மற்றும் சாமந்தி மலர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது.மலர் கண்காட்சி துவங்கி முடிந்த நிலையில் தொடர் மழை காரணமாக இந்த அலங்காரங்களில் உள்ள மலர்கள் அழுக துவங்கின இதனால் மலர் அலங்காரங்களை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
Next Story