ராமேஸ்வரத்தில் இருந்து பட்டுக்கோட்டை, பேராவூரணி வழியாக திருப்பதிக்கு சிறப்பு விரைவு ரயில் 

ராமேஸ்வரத்தில் இருந்து பட்டுக்கோட்டை, பேராவூரணி வழியாக திருப்பதிக்கு சிறப்பு விரைவு ரயில் 
X
ரயில் சேவை
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வழியாக திருவண்ணாமலை, திருப்பதிக்கு தென் மத்திய ரயில்வே சார்பில், சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதற்கு பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.  கோடை கால கூட்ட நெரிசலை தவிப்பதற்காக தென் மத்திய ரயில்வே, சார்லப்பள்ளியிலிருந்து நல்கொண்டா, குண்டூர், தெனாலி, நெல்லூர், ரேணிகுண்டா, திருப்பதி, திருவண்ணாமலை, விழுப்புரம் , மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு சிறப்பு விரைவு ரயில்களை (07695/07696) இயக்குகிறது இந்த சிறப்பு விரைவு ரயில்(07695) 11.06 .2025, 18.06.2025, 25.06.2025 புதன்கிழமைகளில் சார்லப்பள்ளியில் இருந்து மாலை 04.45 மணிக்கு புறப்பட்டு, திருப்பதிக்கு வியாழக்கிழமை காலை 7.10 மணிக்கும், திருவண்ணாமலைக்கு நண்பகல் 12 .28 மணிக்கும், திருவாரூருக்கு மாலை 05.05 மணிக்கும், திருத்துறைப்பூண்டிக்கு மாலை 05.39 மணிக்கும், முத்துப்பேட்டைக்கு மாலை 06.01 மணிக்கும் அதிராம்பட்டினத்திற்கு மாலை 06.13 மணிக்கும், பட்டுக்கோட்டைக்கு மாலை 06.30 மணிக்கும், பேராவூரணி மாலை 6.48 மணிக்கும், அறந்தாங்கிக்கு இரவு 07.15 மணிக்கும், காரைக்குடிக்கு இரவு 08.30மணிக்கும் வந்தடைந்து, வியாழன் இரவு 11.55 மணிக்கு ராமேஸ்வரத்தை அடைகிறது. மறு மார்க்கத்தில் இந்த ரயில் (07696) ராமேஸ்வரத்தில் இருந்து சார்லப்பள்ளிக்கு 13.06.2025, 20.06.2025, 27.06.2025 வெள்ளிக்கிழமைகளில் ராமேஸ்வரத்தில் காலை  09.10 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு 12.00 மணிக்கும், அறந்தாங்கிக்கு 12.30 மணிக்கும், பேராவூரணிக்கு 12.52 மணிக்கும், பட்டுக்கோட்டைக்கு மதியம் 01.15 மணிக்கும், அதிராம்பட்டினம் 01.30 மணிக்கும்,  முத்துப்பேட்டைக்கு 01.42 மணிக்கும், திருத்துறைப்பூண்டிக்கு 02.05 மணிக்கும், திருவாரூர் 03.25 மணிக்கும், திருவண்ணாமலைக்கு வெள்ளிக்கிழமை இரவு 09.12 மணிக்கும், திருப்பதிக்கு சனிக்கிழமை அதிகாலை 02.30 மணிக்கும் வந்தடைந்து, சார்லப்பள்ளிக்கு சனிக்கிழமை மாலை 05.45 மணிக்கு சென்றடைகிறது பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து திருப்பதி, திருவண்ணாமலைக்கு சென்று வர பக்தர்களுக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும், இந்த வாராந்திர ரயிலை நிரந்தர ரயிலாக வாரம் மும்முறை இயக்க வேண்டும் எனவும் இப்பகுதி ரயில் பயணிகள், ஆன்மீக யாத்ரீகர்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
Next Story