வனத்துறை சார்பில், மனோரா கடற்கரையில் தூய்மைப் பணி, அலையாத்தி மரக்கன்றுகள் நடப்பட்டது
தஞ்சாவூர் வனக்கோட்டம், பட்டுக்கோட்டை வனச் சரகத்தில், மாவட்ட வன அலுவலர் ஆனந்த் குமார் உத்தரவின் படி, வனச்சரக அலுவலர் ஏ.எஸ். சந்திரசேகரன் தலைமையில், ஜூன் -5, வியாழக்கிழமை உலக சுற்றுச்சூழல் தினம் மனோரா கடற்கரையில் கொண்டாடப்பட்டது. இதில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, மனோரா கடற்கரையை சுத்தம் செய்தனர். மேலும், மனோரா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், இயற்கை சீற்றங்களில் இருந்து கடற்கரை கிராமங்களை பாதுகாக்கும் வகையில், பள்ளி மாணவர்கள் அலையாத்தி மரக் கன்றுகளை நட்டனர். மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு, வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் வழங்கினார். இதேபோல் சம்பைபட்டினம் கடற்கரையில் அலையாத்தி மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்வில், வனவர் ராஜ்குமார், வனக்காப்பாளர் பாரதிதாசன், பள்ளி ஆசிரியர், மாணவர்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story




