தஞ்சாவூர் அருகே இரு சக்கர வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

தஞ்சாவூர் அருகே இரு சக்கர வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு
X
உயிரிழப்பு
தஞ்சாவூர் அருகே இரு சக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் புதன்கிழமை மாலை உயிரிழந்தார். தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆர். ரெங்கராஜ் (75). இவர் மே 26 ஆம் தேதி பிற்பகல் நாஞ்சிக்கோட்டை பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் இவர் மீது மோதியது. இதனால், பலத்த காயமடைந்த ரெங்கராஜ் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு புதன்கிழமை மாலை உயிரிழந்தார். இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
Next Story