போடியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு

X
போடி அருகே S.தர்மத்துப்பட்டியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவரிடம் வல்லரசு என்பவர் ரூ.3500 கடன் வாங்கி உள்ளார். அதனை திரும்ப கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரம் அடைந்த வல்லரசு கூட்டாளியான செல்வம், மதன் ஆகியோருடன் சந்தோஷ்குமார் வீட்டிற்குள் நுழைந்து அவரை அடித்து காயம் ஏற்படுத்தினர். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் மூவர் மீதும் நேற்று (ஜூன் 5) வழக்குபதிவு செய்துள்ளனர்.
Next Story

