பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் கோயிலை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்ததாக கிராம மக்கள் புகார்
தேனி அருகே அன்னஞ்சி விளக்கு பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் கோயிலை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து கோயிலை பூட்டி வைத்திருப்பதாகவும் இதனால் பொதுமக்கள் யாரும் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை என்று அப்பகுதி கிராம மக்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்திருந்தனர் அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவு பேரில் தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருதரப்பினரிடம் தேனி தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது இதில் கோயிலை ஆக்கிரமிப்பு செய்ததாக நபர் பங்கேற்காத நிலையில் ஊர் பொதுமக்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி தொண்டரணி நிர்வாகி குரு ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் தரப்பு ஆவணங்களை சமர்ப்பித்து விளக்கத்தை தாசில்தாரிடம் தெரிவித்து சட்டத்திற்கு புறம்பாக கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர் இந்நிலையில் கோயில் பிரச்சினை தொடர்பாக ஆர்டிஓ விசாரணை நடைபெறும் நிலையில் அதுவரை இருதரப்பும் கோயிலுக்கு செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து தங்கள் தரப்பு விளக்கத்தை உரிய ஆவணங்களுடன் தாசில்தாரிடம் கொடுத்து கிராம மக்கள் வழிபட கோயிலை மீட்டு தர தாசில்தாரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்
Next Story




