கண்ணமங்கலம் புதுப்பேட்டை முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் திருவிழா.

கண்ணமங்கலம் புதுப்பேட்டை முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் திருவிழா.
X
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் உள்ள சிவசக்தி வள்ளி முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது.
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் உள்ள சிவசக்தி வள்ளி முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆரணி அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட நூற்றாண்டு பழமையான மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடந்தோறும் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவையொட்டி பக்தர்கள் பூங்கரகம் எடுத்து வீதி உலா சென்று வந்தனர். இதனை தொடர்ந்து கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் பக்தர்கள் கூழ்வார்த்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.
Next Story