கோவை: வானத பிறந்தநாள் – மருதமலையில் சிறப்பு வழிபாடு !
பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பிறந்த நாளையொட்டி, கோவை தெற்கு தொகுதியில் உள்ள நான்கு மண்டலங்களில் நேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மருதமலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி, பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அத்துடன், அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள், மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு வானதி சீனிவாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Next Story



