கிருஷ்ணகிரி கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து தொழிலாளி பலி
X
கிருஷ்ணகிரி கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி அருகேயுள்ள பாறைக்கொட்டாயை சேர்ந்தவர் சின்னநாகப்பன் (65) தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரில் உள்ள தனது மகன் கோவிந்தராஜ் என்பவரது வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த செப்டிக் டேங்கில் அவர் தவறி விழுந்தார். அவரை மீட்டனர். ஆனால் சிறிது நேரத்திலேயே சின்னநாகப்பன் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சின்னநாகப்பனின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story