கோவை: மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கி வைப்பு !

கோவை, தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடமாடும் மருத்துவமனை வாகனத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
கோவை, தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், மக்கள் வீடு தேடி சிகிச்சை வழங்கும் வகையில், அதிநவீன வசதிகள் கொண்ட நடமாடும் மருத்துவமனை வாகனத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம், சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாத இடங்களுக்கும் மருத்துவ சேவைகள் எளிதில் வழங்கப்பட உள்ளன. இந்த வாகனத்தில் ரத்த பரிசோதனை, எக்கோ, ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட சேவைகள் உடனடியாக செய்யும் வசதியும் உள்ளது. இதன் மூலம் கிராமப்புற மக்கள் சிக்கனமாகவும் விரைவாகவும் சிகிச்சை பெற முடியும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story