தேன்கனிக்கோட்டை அருகே விவசாயியை தாக்கியவர் கைது.

தேன்கனிக்கோட்டை அருகே விவசாயியை தாக்கியவர்  கைது.
X
தேன்கனிக்கோட்டை அருகே விவசாயியை தாக்கியவர் கைது.
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள அரசகுப்பம் மாரேகவுண்ட னப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசரெட்டி (30) விவசாயியான. இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். கடந்த 2-ஆம் தேதி குடும்பத்துடன் அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகே அவர் காரை நிறுத்தி விட்டு பானிப்பூரி சாப்பிட்டு கொண்டிருந்த போது அஞ்செட்டியை சேர்ந்த ராமு (25) சுந்தர் (25) ஆகியோர் டூவீலரில் வந்து சீனிவாச ரெட்டியின் கார் மீது மோதியதாக கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த 2 பேரும் சீனிவாசரெட்டியை தாக்கியுள்ளனர். இது குறித்து அவர் அஞ்செட்டி போலீசில அவர் புகார் கொடுத்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமுவை கைது செய்தனர். சுந்தரை தேடி வருகின்றனர்.
Next Story