சுகாதார துறை விளக்கம் தருவாரா?

X
மதுரை எம்.பி வெங்கடேசன் தமிழக சுகாதாரத் துறை அமைச்சரிடம் விளக்கம் கேட்டு சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மதுரை விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலக வளாகத்தில் ஶ்ரீ வெற்றி வலம்புரி விநாயகர் ஆலய பிரதிஷ்டை நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் (ஜூன் .5) மாலை துவங்கி நேற்று (ஜூன் .6) நண்பகல் வரை யாகம் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் இயக்குநர், மற்றும் மதுரை மாவட்ட சுகாதாரத்துறையின் இயக்குநர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். சுகாதாரத்துறை அலுவலக வளாகம் யாகம் செய்து வழிபாடு நடத்த வேண்டிய இடமா? தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனரின் பணிகளுள் மருத்துவ வளாகத்திற்குள் யாகம் நடத்துவதும் உள்ளடங்கியுள்ளதா? அனைத்து மத வழிபாடுகளையும் மருத்துவ வளாகத்திற்குள் அனுமதிக்குமா தமிழ்நாடு மருத்துவத் துறை? மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் விளக்குவாரா? என விளக்கம் கேட்டுள்ளார்.
Next Story

