கலைஞர் பிறந்த நாள் விழாவில் நலதிட்ட உதவிகள்: அமைச்சர்

கலைஞர் பிறந்த நாள் விழாவில் நலதிட்ட உதவிகள்: அமைச்சர்
X
கலைஞர் பிறந்த நாள் விழாவில் நலதிட்ட உதவிகள்: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!
தூத்துக்குடியில் கலைஞர் பிறந்த நாள் விழாவில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் போல்பேட்டை பகுதி திமுக சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் வழங்கினார். மேலும், அவர் முத்தையாபுரம் பகுதி திமுக சார்பில் ஊரணி ஒத்த வீடு, காதர் மீரான் நகர், கோவில் பிள்ளைநகர், முத்து நகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Next Story