கோவை: கோவையில் ஐந்து காவலர்கள் பணியிடை நீக்கம் !

X
கோவை மாநகரத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தரின் உத்தரவுப்படி, வடவள்ளி, செல்வபுரம், போத்தனூர் மற்றும் வெரைட்டிகால் சாலை காவல் நிலையங்களைச் சேர்ந்த மணிகண்டன், வடிவேலு, கபூர், வினோத் மற்றும் மகாராஜன் ஆகியோர் மீது நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது போக்குவரத்து விதிமுறை மீறியவர்கள், வழக்கு புகார் தருபவர்கள் மற்றும் சரக்கு வாகனங்களில் இருந்து லஞ்சம் பெற்றதுடன், குற்றவாளிகளுடன் உடந்தையாக இருந்தது போன்ற பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நடவடிக்கை கோவை காவல் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

