திருச்செங்கோட்டில் பக்ரீத் பண்டிகை தொழுகை

திருச்செங்கோட்டில் பக்ரீத் பண்டிகை தொழுகை
தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை ஒட்டி திருச்செங்கோடு சங்ககிரி ரோட்டில் உள்ள ஈத் கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்று திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.இஸ்லாமிய பெருமக்களால் தியாகத்திருநாள் எனப்படும் பக்ரீத் திருநாளை ஒட்டி நாடு முழுவதும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு சங்ககிரி ரோட்டில் உள்ள ஈத் கா மைதானத்தில் திருச்செங்கோடு இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.தியாகத் திருநாளை ஒட்டி குர்பானி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது வசதி உள்ளவர்கள் ஆடுகளை வெட்டி தங்களது உறவினர்களுக்கும் ஏழ்மையில் உள்ள இஸ்லாமியர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆட்டிறைச்சி வழங்கினர்.தொழுகைக்குப் பின் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
Next Story